நிவர் புயல் காரணமாக 5 விமானங்கள் ரத்து!
தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் காரணமாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று மதியம் ஒரு மணி முதலே ஒரு சில மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் நாளை பேருந்துகள், ஆம்னி பஸ்கள் மற்றும் மின்சார ரயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை புயல் காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் நிலை என்ன ஆகும் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது