வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (16:05 IST)

உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போது - நாளை தேதி அறிவிப்பு?

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்தான தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 24ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது.
 
இதற்காக சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது.
 
புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பம் செய்திருந்தால் அவர்களுக்காக துணை வாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது.
 
தமிழகம் முழுவதும் தேர்தல் செலவுக்கான அரசு ரூ.183 கோடியை ஒதுக்கி உள்ளது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
 
இதனால் உள்ளாட்சி தேர்தல் எந்த தேதியில் நடத்தப்படும் என்பதற்கான அறிவிப்பு, திங்கட்கிழமை செப்டம்பர்-19 வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.