திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:32 IST)

கள்ளக்குறிச்சி பள்ளியில் நேரடி வகுப்புகள் எப்போது? புதிய தகவல்

School
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த பள்ளி மீது பொதுமக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவது எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 
அனேகமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.