வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:12 IST)

டிடிவி.தினகரனுக்கு பேசவே தெரியாது ; எதுக்கு பதவி ? தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி !

பேரவையில்  பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு பதவி என அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் புகழேந்தியின் விமர்சனத்துக்கு, திமுக கொள்கைப் பரப்புச்  செயலாளர்  தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவளித்துள்ளார்.
அமமுக கட்சி  செய்தித் தொடர்பாளர் புகழேந்தி  சமீபத்தில் அக்கட்சித் தலைவர்  தினகரனுக்கு எதிராக சில விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து அவர் அமமுகவில் இருந்து விலகப்போகிறார் என்ற கருத்து வெளியானது. அமமுகவில் இருக்கும் பல முக்கிய பிரமுகர்கள் எல்லாம் திராவிட( அதிமுக, திமுக )  கட்சிகளுக்கு போய்க்கொண்டிருப்பதால் , தினகரன் கட்சி பலம் குன்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில், கடந்த திங்களன்று , கோவை மாவட்டத்தில், அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புகழேந்தி கூறியதாவது :
 
இடைத்தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்றால் தினகரன் யாரிடம் விலை போனார் ?
 
டிடிவி. தினகரன் பின்னால் இனிமேல் எங்களால்  பயணிக்க முடியாது. நம்முடைய கனவுகள் எல்லாம் பொய்யாகிப் போனது. இந்த நிலையில் தினகரனால் அரசியலில் நிலைக்க முடியாது. ஒருவேளை அதிமுகவுக்கு எதாவதும் பிரச்சனை என்றால் நாங்கள் சிப்பாய்களாக துணையாய் நிற்போம்.
தினகரன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இழிவு செய்து பேசி வருகிறார். மக்கள் அதை ஏற்கவில்லை. அதிமுக கட்சிக்கோ, ஆட்சிக்கு எதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்போம் . அவரை நம்பி, அதிமுகவிலிருந்து அமுகவில் இணைந்ததால்  தகுதி நீக்கம் நீக்கம் செய்யப்பட்ட 18  எம்.எல்.ஏக்களும் மன உளைச்சலில் உள்ளனர். அதனால் எம்.எல்.ஏவாக உள்ள தினகரன் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். 
 
மேலும் , பேரவையில் பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி?எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா  செய்து விடலாம் என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது :
 
பேரவையில் பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா  செய்து விடலாம் என்று புகழேந்தி கூறியுள்ளது முகச் சரியானது எனத் தெரிவித்துள்ளார்.
 
அமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க  தமிச்செல்வனுக்கு, அக்கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.