வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (12:37 IST)

அமித்ஷா வலையில் வீழ்ந்துவிட்டாரா ஸ்டாலின்?

வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தெற்கே உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் அமித்ஷா பெயர் உள்ளதால் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 2017 ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா நடைப்பெற்றபோது பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு 'திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் ஒரு கட்சியை எப்படி அழைக்க முடியும்' என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார். ஆனால் இப்போது அதே அமித்ஷாவை ஸ்டாலின் அழைத்துள்ளது முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது.
 
பகைவரை உறவாடி கெடு' என்பதுதான் அமித்ஷாவின் டெக்னிக். முதலில் அதிமுகவுடன் உறவாடி அந்த கட்சியை இரண்டு அணிகளாக உடைத்து, இரண்டு அணிகளையும் கிட்டத்தட்ட தனது பிடிக்குள் வைத்திருக்கும் அமித்ஷா, அடுத்ததாக திமுகவின் கூட்டணி கட்சிகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
திமுகவுடன் பாஜக கூட்டணி என்ற வதந்தியை கிளப்பிவிட்டால் திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிறுபான்மை கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறியவுடன் திமுகவையும் கைகழுவிவிட்டு ரஜினியுடன் கூட்டணி வைத்து இரு திராவிட கட்சிகளையும் அழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக கருதப்படுகிறது. இந்த வலையில் ஸ்டாலின் விழுவாரா? அல்லது சுதாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்