செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (14:13 IST)

பேரணியை நேரடி ஒளிபரப்பு செய்ய பிளான் போடும் மு.க.அழகிரி

செப்டம்பர் 5ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி செல்ல முடிவு எடுத்துள்ள அழகிரி அதனை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் செர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
அழகிரி தனது ஆதங்கத்தை விரைவில் தனது ஆதரவாளர்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறினார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
 
இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் வரை கலந்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். திமுக செயற்குழு கூட்டம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக பெறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
 
நேற்று அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது, தாய் கழமான திமுகவில் சேர்வது என்ன தவறு என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் நடைபெற உள்ள பேரணியை நேரடி ஒளிபரப்பு செய்ய அழகிரி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.