1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (12:54 IST)

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தால் மக்களுக்கு என்ன பயன்? – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி!

விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்கப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிரான மனுக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.



செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பல கோவில்களிலும், தெருக்களில் மக்கள் சேர்த்து விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டு பின்னர் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபட தமிழக அரசு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களுக்கு உரிய அனுமதியை பெற வேண்டும், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்ட ரசாயன விநாயகர் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் விநாயகர் சிலை வைக்க அரசு அனுமதிக்காவிட்டால் அதுகுறித்து நீதிமன்றத்தில் மனு அளிப்பதும் கடந்த காலங்களில் நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், விநாயகர் சிலைகளை வைத்து அரசியல் செய்யப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சிலை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லும்படி விநாயகர் கூறாத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தனது சொந்த கருத்து மட்டுமே என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K