செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (19:16 IST)

”மார்க் ஆண்டனி” தடை நீக்கம்.. ஆனா..? – விஷாலை எச்சரித்த நீதிமன்றம்!

Mark antony
விஷால் நடித்து வெளியாகவுள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து இந்த வாரம் வெளியாக உள்ள படம் மார்க் ஆண்டனி. ஆரம்பத்தில் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாத இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானதும், பலரையும் கவர்ந்ததுடன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 15ல் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் விஷால் முன்னதாக லைக்கா நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதில் விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்க கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “மார்க் ஆண்டனி” படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் வங்கி கணக்கு விவரங்கள் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் விஷாலை வார்னிங் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K