1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2017 (20:53 IST)

தேசிய கொடியால் முகம் துடைத்த மோடி மீது என்ன நடவடிக்கை? - திருமாவளவன்

தேசிய கொடியால் முகம் துடைத்த பிரதமர் மோடி மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “6 நாட்கள் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை 7ஆவது நாள் மிகக் குறைந்த அவகாசம் மட்டும் அளித்து, போராட்டத்தை கைவிட சொல்லி தடியடி நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டதா… காவல்துறையே வன்முறையை ஏற்படுத்தியதா? தேசிய கொடியை அவமதித்ததால் போராட்டத்தை காவல்துறையினர் நிறுத்தினார்கள் என்றால் பிரதமர் தேசிய கொடியால் முகம் துடைத்தார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ, கிராபிக்ஸ் செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.