1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (10:39 IST)

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம்

வாங்கிய வங்கிக்கடனை திரும்ப செலுத்தாததால் திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் காவாலிபாளையம் பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் எற்பட்ட நஷ்டம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் பேங்கில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
 
கடன் தொகை திருப்பி செலுத்துமாறு வங்கி சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் பணம் கட்ட தவறியதால், அவர் வாங்கிய 175 கோடி ரூபாய் கடனுக்காக அவர் அடமானம் வைத்த சொத்துக்களை கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி. பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் கையகப்படுத்தப்பட்டது.