’தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்’ - அர்ஜுன் சம்பத் அதிரடி
பாரம்பரிய மாடுகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடத்தில் பேசிய அர்ஜூன் சம்பத், ”நாட்டு இன மாடுகள் மற்றும் காங்கயம் இன மாடுகள் அடுமாட்டுக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. எனவே பாரம்பரிய மாடுகளை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.