வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (12:54 IST)

உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஒரு வருடமாக திட்டமிட்டோம் : முதல்வர் பழனிசாமி

சென்னையில் 2 - வது உலக  முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கி வெகுசிறப்பாக  நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது;
 
’தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி முதலீடுகளைக் கவர்வதே தமிழக அரசின் நோக்கம். உலகின் முன்னணி வாகன நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் செயல்பட்டு வருகின்றன.
 
மின்சார உற்பத்தியில்  தன்னிறைவு பெற்றதுடன் மிகை மின் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. மின்னனு தொழில்நுட்பதுறை தொடர்பான ஆலைகளும் தமிழகத்தில் தான்  செயல்பட்டு வருகின்றன.
 
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உலகத்தரத்திலான திட்டமாக உள்ளது. முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
தொழில்துவங்க அனுமதி பெறும் நடைமுறைகள் தமிழகத்தில் எளிமையாக்கப்பட்டுள்ளன.  கடந்த 7 ஆண்டுகளில் தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மின்மாநிலமாக உள்ளது. நகரமயமாவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
 
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்மூலம், உற்பத்தியை அதிகரிக்க தமிகம் முன்னுரிமை அளித்து வருகிறது. சர்வதேச உள்நாட்டு பயணிகளை கவரும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஒரு  வருடமாக திட்டமிட்டோம்.  மேலும் சாளர முறையில் அனுமதி தரப்படுகிறது. ராணுவ தளவாட உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி  வருகிறோம்’. இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும், அதன் பின்பு  பேசிய  பாதுகாப்பு  துறை அமைச்சர்  நிர்லமா  சீதாராமன்: 
’தொழில் துறைக்கு ஏற்ற வகையில் தமிழகம்  மிகைமின் மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறினார்.’