'பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம்' - சீமான்
தலைவர் பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் செத்தாவது எங்களது இனத்தை வாழ வைப்போம் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேசனை ஆதரித்து, திண்டுக்கல் நாகல் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், “50 ஆண்டு காலமாக ஆட்சி மாறி வருகிறதே தவிர, ஆள் மாறவில்லை. அதை மாற்றத்தான் வந்திருக்கிறோம். காமராஜர் ஆட்சியில் வளர்ந்த வளர்ச்சியில் ஒரு பகுதி கூட இப்போது இல்லை.
தலைவர் பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் செத்தாவது எங்களது இனத்தை வாழ வைப்போம். அரிசி, உணவு, வீடு இதற்கெல்லாம் மாற்றம் கொண்டு வருவோம், நல்ல குடிநீர், மருத்துவம் தரமாக கொடுக்க வழி செய்வோம். வள்ளுவர் படிக்கவில்லை. அவர் எழுதிய குறள் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது.
படிக்காத காமராஜர், இளையராஜா, சிவாஜி ஆகியோர் படிக்காமக் கூட இன்றளவும் அவர்களுடைய திறமைகள் பேசப்பட்டு வருகிறது. ரகுமான், தெண்டுக்கர் ஆகியோர் அந்த ஆர்வத்துடன் வந்தவர்கள். பிள்ளைகளை அவரவர் விருப்பத்திறகு விட்டுவிட்டாலே நாடு முன்னேறும்” என்று கூறியுள்ளார்.