செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (20:07 IST)

எங்களுக்கு இடையேயான பிரச்சனையை முடித்துக்கொண்டோம்- சூர்யசிவா, டெய்சி பேட்டி

surya siva
தங்களுக்கு இடையேயான பிரச்சனையை பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொண்டதாக  திருச்சி சூர்ய சிவாவும், டெய்சியும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சமீபத்தில்,  பாஜக நிர்வாகி டெய்சிக்கும்,  திருச்சி எம்பி சிவாவின்( திமுக) மகன் சூர்யா சிவாவுக்கும் அவருக்கும் இடையே போனில் வாக்கு வாதம் எழுந்த  நிலையில்,

பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார்.

அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த விவகாரம் தொடர்பாக இன்று டெய்சியும், சூர்ய சிவாவும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அதில், சூர்ய சிவா எனக்குத் தம்பி மாதிரி, எங்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்த்து கொண்டோம். இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சிவா, அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதைப் பரப்பி வருகின்றனர். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்  என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj