ஆட்சி கலைக்கப்படுகிறதா? நாராயணசாமி பரபரப்பு பேட்டி!
பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கந்தசாமி “மத்திய அரசும், ஆளுனர் கிரண்பேடியும் புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். அவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து ஆட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான எனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. இந்திய அரசியல் சாசனப்படி புதுச்சேரி அரசு செயல்படும். புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என கூறினார்.