திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (11:34 IST)

தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பரிதாப பலி.. பள்ளிக்கு செல்லும்போது நிகழ்ந்த சோகம்..!

சென்னையில் தண்ணீர் லாரி மோதி 10 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை கோவிலாம்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி தாய் கண் முன் உயிரிழந்தார். தண்ணீர் லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம் என தகவல்
 
 10 வயது சிறுமி தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்,.
 
அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பற்றி பல செய்திகள், புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
Edited by Siva