திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (19:58 IST)

ஆயுதங்கள் வைத்துக் கொண்டு ரீல்ஸ் வீடியோ பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

அச்சுறுத்தும் தொனியில் ஆயுதங்கள் வைத்துக் கொண்டு பிஜிஎம் கொண்ட வீடியோ  பதிவிடும் நபர்களின் விவகரங்களை 94874 64651  என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் IPS தெரிவித்துள்ளார்.
 
ஆயுதங்களை இடுப்பில் மறைத்து வைத்து வெளியில் எடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞர் அணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், தல்லாகுளம் காவல் நிலயத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  பாஜக இளைஞர் அணி மதுரை மாவட்ட செயலாளார் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில், அபாயகரமான  ஆயுதங்களுடன் புகைப்படங்கள்,  வீடியோக்களை பதிவிடும் நபர்கள், கோரமான ஆயுதங்களைக் கொன்டு விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள், அச்சுறுத்தும் தொனியில் ஆயுதங்கள் வைத்துக் கொண்டு பிஜிஎம் கொண்ட வீடியோ  பதிவிடும் நபர்களின் விவகரங்களை 94874 64651  என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் IPS தெரிவித்துள்ளார்.