1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:47 IST)

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.

 
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென்தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கடல் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.