1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (12:06 IST)

வாக்காளர் பட்டியல் முரண்பாடுகளை களைய வேண்டும்..! தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முறையீடு.!!

jayakumar
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தேச தேர்தல் தேதி, வாக்குச்சாவடி நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தன.
 
மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 
 
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் வாக்காளர் பட்டியலில் தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்களை இன்னும் சேர்க்கவில்லை என்று அவர் கூறினார்.
 
தேர்தல் விருப்பு வெறுப்பின்றி தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தினரை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.