செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (07:09 IST)

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட தயாராகி வருகின்றனர். வாக்குச்சாவடியில் அசம்பாவிதத்தை தவிர்க்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் வாக்காளர்கள் பயமின்றி வாக்களித்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரி, அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஷா, திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மட்டும் மொத்தம் 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கத்து