திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (15:03 IST)

தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்கள்

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களில் 137 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது.
மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, குஜராத்தை தனது ஆத்மா என்றும் இந்தியா தான் தனது உயிர் மூச்சு என்றும் நாட்டை முன்னேற்றுவதற்கு என்ன விலை கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறினார்.
 
இந்த நிலையில் ஜனநாயக மறுசீரமைப்பு சங்கத்தினர் எடுத்த கணக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில்  137 வேட்பாளர்கள் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கொலை, ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். 
 
இவர்களில் பா.ஜனதா சார்பில் 10 பேரும், காங்கிரஸ் சார்பில் 20 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 8 பேரும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 3 பேரும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.