இன்று 15 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை.. வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அது மட்டும் இன்றி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி உள்ளதை அடுத்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பதினைந்து மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva