இந்த தேர்தலில் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:38 IST)

சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை.
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்தது.

இதில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியன் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்து சென்றுள்ளனர். விஜயகாந்த் வாக்களிக்காததால் அவர் படத்தில் கூறியதை போலவே ஓட்டு போடுலனா குடியுரிமை கட் பண்ணுங்க என சமூகவலைத்தளவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர் .


இதில் மேலும் படிக்கவும் :