1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:35 IST)

அண்ணா பல்கலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் புதிய ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்
 
இந்த முடிவால் 400 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்