திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (15:09 IST)

உடல் நிலை தேறி வரும் விஜயகாந்த்…. தொண்டர்கள் உற்சாகம்!

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலக் குறைவு காரணமாக அவஸ்தைப்பட்டு வருகிறார். கடந்த தேர்தலிலும், மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போதும், அவரால் பேச முடியவில்லை.

இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் விஜயகாந்த்  அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்துடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார்.

பின்னர், நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான ரஞ்சித், தனது பதிவில், விஜயகாந்த் சிறந்த மனித நேயப்பண்பாளர், மக்களுக்காக எவ்வளவோ செய்துள்ளார். ஆனால் அவருக்கு கண்பார்வை சரியாகத் தெரியவில்லை என்பதை உணராத மக்கள் அவர் மதுகுடித்து வந்து பேசுவதாக தவறாக பேசுவதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயகாந்தின் பள்ளிகால நண்பர் சங்கர் என்பவர் விஜயகாந்த்திற்கு அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். அதில், அவர் உடல் நிலை தேறி வருவதாகவும், விரைவில் பூரண குணம் பெற்று பழைய விஜயகாந்த் கம்பீரமாக வருவார் என கூறியுள்ளார்.

இதனால் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேப்டனின் குரல் அரசியலிலும் , சினிமாவிலும் ஒலிக்க வேண்டும் என்பதுதானே அனைவரின் ஆசையும்!