1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 21 மே 2016 (16:31 IST)

விஜயகாந்த்-காக உயிரையே மாய்த்துக் கொண்ட தொண்டன்

விஜயகாந்த்-காக உயிரையே மாய்த்துக் கொண்ட தொண்டன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்வி எதிரொலியாக அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தனது உயிரையே மாய்த்துக் கொண்டார்.
 

 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது கொங்கராயலூரில் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார் சுப்பிரமணியன் (42).
 
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். மேலும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.
 
இதனால், மனமுடைந்த சுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தற்கொலை செய்த சுப்பிரமணியனுக்கு வீரம்மாள் என்ற மனைவியும், விஷ்ணு, திருமூர்த்தி ஆகிய இரு  மகன்கள் உள்ளனர்.