திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (14:45 IST)

யாருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது திமுக? விஜயபாஸ்கர் கேள்வி..!

vijayabashkar
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நீட் தேர்வை உறுதி செய்தது உச்சநீதிமன்றம், அந்த வகையில் திமுக உச்சநீதிமன்றம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறதா என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.  

நீட் தேர்வு என்பது விஷ விதை என்றால் அதை விதைத்தது காங்கிரஸ் கட்சி. ஜல்லிக்கட்டுக்கு பாதகம் செய்தாலும் நீட் தேர்வில் பாதகம் செய்ததும் காங்கிரஸ் கட்சி தான்

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தினாலும் பாதிப்பை குறைக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் 38 திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும், அதுதான் ஆக்கபூர்வ நடவடிக்கை, நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் திமுக கையெழுத்து வாங்குமா என்பதை விளக்க வேண்டும் என விஜய் பாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Edited by Siva