1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:55 IST)

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி? தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

Vijaya prabhakaran
தேமுதிக முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அதிமுக மற்றும் பாஜகவுடன் நடத்தி வருகிறது என்பதும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக அல்லது அதிமுக என எந்த கூட்டணியில் தேமுதிக சேர்ந்தாலும் அக்கட்சிக்கு மூன்று தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் மூன்று தொகுதிகளில் பிரேமலதா, விஜய பிரபாகரன் மற்றும் எல்கே சுதீஷ் ஆகிய மூவரும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல் முறையாக பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்திக்க உள்ள விஜய பிரபாகரன் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva