ஜெ.விற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் டிவி கோபிநாத் தாக்கப்பட்ட வீடியோ


Murugan| Last Modified புதன், 7 டிசம்பர் 2016 (12:25 IST)
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி  நேற்று முன் தினம் இரவு காலமானார். 

 

 
இதையடுத்து, அடக்கம் செய்யப்படுவதற்கு முன், அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்து. 
 
அப்போது ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத்தும் அவர்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டினர். அப்போது கோபிநாத்துக்கும் சில அடிகள் விழுந்தது. அவர் ஏதேதோ சொல்ல முயன்றார். ஆனால் போலீசார் எதுவும் காது கொடுத்து கேட்காமல்  விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.
 
அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :