1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (13:46 IST)

மாநில மாநாடு, மண்டல மாநாடு, நடைப்பயணம்.. விஜய்யின் பக்கா அரசியல் பிளான்கள்..!

Vijay Speech
தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்றும் ஒரு வாழ்த்துக்கள் மட்டுமே கூறும் தலைவராக இருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் பக்கா பிளான் உடன் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஓய்வில் இருக்கும் விஜய், அடுத்த கட்டமாக முழு வீச்சில் அரசியலில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும் இந்த மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் மாநாடு நடக்க இருப்பதாகவும், அதன் பிறகு 10 மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி 100 சட்டமன்ற தொகுதிகளில் விஜய் நடைபயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நடை பயணம் செல்லும் பாதைகள் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் நடை பயணம் தேதி அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயர் பதிவு செய்த அடுத்த நாளே தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மாநில மாநாடு, மண்டல மாநாடு, பொதுக்கூட்டம் ,நடைபயணம் என அடுத்தடுத்து விஜய் பக்கா பிளான் போட்டு உள்ளதை  அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran