வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (15:17 IST)

விஜயகாந்துடன் சேர்ந்து நடிக்க மறுத்தேன்… ஏன் என்றால்?- பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் பகிர்ந்த தகவல்!

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வந்தார். நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்ற உறுதியோடு இருந்த அவர் மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமான்யன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னுடைய திரையுலக வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார். அதில் “பூ மழை பொழியுது என்ற படத்தில் என்னை விஜயகாந்துடன் சேர்ந்து நடிக்கக் கேட்டார்கள். ஆனால் செகண்ட் ஹீரோவாக நான் நடிக்க மாட்டேன் என சொல்லி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். ராமராஜன் இதுவரை எந்தவொரு ஹீரோவோடும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.