1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay makkal iyakkam admin joined in dmk

விஜய் கட்சியில் இருந்து முதல் விக்கெட் அவுட்.. திமுகவில் இணைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!

விஜய்
விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தூத்துகுடி மாவ்ட்ட  நிர்வாகி திடீரென திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய் மக்கள் இயக்கம் என்பது தமிழக வெற்றி கழகமாக மாறி உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் அப்படியே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆக மாறுவார்கள் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துகுடி மாவட்ட நிர்வாகியாக இருக்கும் பில்லா ஜெகன் என்பவர் திடீரென திமுகவில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் திமுகவில் தான் இருந்ததாகவும் அதன் பின்னர் சில பிரச்சினைகள் காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திமுகவில் அவரை இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகியாக பில்லா ஜெகனின் தம்பி சுமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்த ஒரே வாரத்தில் ஒரு விக்கெட் இழந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக கூட்டணியிலும் சிக்கல்.. தொகுதி உடன்பாட்டில் கருத்துவேறுபாடு என தகவல்..!