1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (10:11 IST)

யாருக்கு ஓட்டு போட வேண்டும்.. விஜய்யின் மறைமுக மெசேஜால் ரசிகர்கள் பரபரப்பு..!

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்து விட்ட நிலையில் தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து கூறாத விஜய், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் அதற்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார்

நாட்டில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம உரிமை கிடைக்க உறுதி ஏற்போம் என்று அவர் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை அடுத்து திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவுக்கு தான் தனது ரசிகர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக அவர் மெசேஜ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் திமுகவை எதிர்த்து வரும் காலத்தில் அரசியல் செய்ய இருக்கும் விஜய் எப்படி திமுகவுக்கு தனது ரசிகர்களை வாக்களிக்க சொல்வார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது

மொத்தத்தில் விஜய் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெளிவாக கூற வேண்டும் அல்லது தனது ரசிகர்கள் தங்கள் விருப்பம்போல் ஓட்டு போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran