செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மே 2023 (15:21 IST)

மதுரையில் மாநாடு! இந்த ஆண்டே கட்சி தொடங்கும் விஜய்? – மதுரை ரசிகர்கள் போஸ்டர் வைரல்!

Vjay Poster
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க போவதாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவராகவும் இருக்கிறார் விஜய். நடிப்பை தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

அதில் ”2024 பாராளுமன்றமே 2026 தமிழக சட்டமன்றமே!” என்று வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், விரைவில் மதுரையில் மாநாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை மதுரையில் மாநாடு வைத்தே தொடங்கினார். அதுபோல விஜய்யும் மதுரை மாநாடு அமைத்து கட்சியை தொடங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Edit by Prasanth.K