கார்த்தி & நலன் இணையும் படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்!
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து நலன், கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் கமர்ஷியல் படங்களுக்கான ஒரு ட்ரிப்யூட் போல உருவாக உள்ளதாக இயக்குனர் நலன் தெரிவித்திருந்தார். இதுவரை இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் வைத்திருந்தனர். இதையடுத்து இப்போது லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகையான க்ரீத்தி ஷெட்டி இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மலையாள ஒளிப்பதிவாளர் நீக்கப்பட்டு, இப்போது ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.