வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (15:04 IST)

இதெல்லாம்…விஜய் ரசிகர்களின் ஆர்வக்கோளாறு - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..

நடிகர் விஜய் நடிப்பில்,இயக்குநர் அட்லியின் இயக்கத்தின் உருவான பிகில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இரு நடிகர்களுன் படங்களுமே ரசிகர்ளின் எதிர்பார்பைப் இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதிக லாபத்தில் டிக்கெட் விற்பதை தடுப்பதற்காக, பிகில் மற்றும் கைதி ஆகிய படங்களுக்கான சிறப்புக் காட்சிகளை  தமிழக அரசு ரத்து செய்தது இரு நடிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை உண்டு பண்ணியது.
 
இந்நிலையில் இன்று காலை படம் வெளியாகி நல்ல முறையில் விமர்சனங்கள் வந்த நிலையில், சிறப்புக் காட்சியை தமி்ழக அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய்  ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
இதுவரை 30 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் தகராறில் ஈடுபட்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
 
விஜய்  ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.