1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (07:30 IST)

திருவான்மியூர் மண்டபத்திற்கு வந்தார் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் விழா ஆரம்பம்..!

Vijay
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்துகிறார் என்றும் பரிசு பொருள்களும் வழங்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் செய்து வந்த நிலையில் காவல்துறையிடமும் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் விஜய் திருவான்மியூர் திருமண மண்டபத்திற்கு வந்ததாகவும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் தயார் நிலையில் இருப்பதால் இன்னும் சில நிமிடங்களில் இந்த விழா ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய விழாவின் போது விஜய் தன்னுடைய கைகளால் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்க உள்ளார் என்றும் அதன் பிறகு இறுதியில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva