வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (12:19 IST)

தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு! – சிக்கியது எவ்வளவு?

ரூ.25 கோடியை அடுத்து மேலும் ரூ.3 கோடி கொடுத்த பிரபல நடிகர்
தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வெளியான புகாரில் பல அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை முதலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனை மேலும் பல அரசு அலுவலகங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By: Prasanth.K