ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (13:51 IST)

ஜெ. வீடியோ விவகாரம் ; வெற்றிவேல் எந்த நேரமும் கைது?

தினகரன் ஆதரவு வெற்றிவேல் எம்.எல்.ஏ.வின் முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற ஒரு நாளுக்கு முன்பு தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
ஆர்.கே. நகரில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்னர் இந்த வீடியோ வெளியானதால் இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
 
அந்நிலையில், அவரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே வெற்றிவேல் அவர் விரைவில் கை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், அடுத்த கட்ட முயற்சியாக அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக கூறப்படுகிறது.