திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (06:55 IST)

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இயக்க அனுமதிக்க கூடாது: வேதாந்தா நிறுவனம்

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது 
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தமிழக அரசை உற்பத்தி செய்யலாமே என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது 
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் திடீரென உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜனை உற்பத்தி கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது 
 
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கான கருவிகளை இயக்க தமிழக அரசிடம் நிபுணர்கள் கைவசம் இல்லை என்றும் எனவே அரசு அதனை மேற்கொண்டால் ஆபத்து வரலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் இது குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்