1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (14:01 IST)

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ்!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த  சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். 
 
புதிதாக பதவியேற்றுள்ள வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் துணைவேந்தராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.