வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (19:00 IST)

மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

மே 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் விசேஷங்களை அடுத்து உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்பதை தெரிந்தது.
 
இந்த நிலையில் மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva