வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: கீ.வீரமணி வலியுறுத்தல்

அனைத்து சாதியினர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி என்ற நடவடிக்கை ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 
நேற்று நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் 'பெரியாரியல் பயிற்சி பட்டறை'  நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கீ.வீரமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என கூறினார். வீரமணியின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகளின் ஒருவர், 'திராவிடர் கழகத்தின் தலைவராக, வீரமணியின் குடும்பத்தை சாராத, ஓர் பெண்ணை நியமனம் செய்த பிறகு, இப்படிச் சொன்னால், அது பகுத்தறிவு. இல்லை எனில், டுபாக்கூர் அறிவு என்று பதிவு செய்துள்ளார். மேலும் சாமியே இல்லனு சொல்லிட்டு அர்ச்சகர் யார் இருந்தா உங்களுக்கு என்ன? என்று இன்னொரு டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார்.