1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஆகஸ்ட் 2018 (12:17 IST)

ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பு, கீறி மோதல் - தெறித்து ஓடிய ஊழியர்கள்

ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பும், கீறியும் மோதிக் கொண்டதை பார்த்த ஊழியர்கள் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடினர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸ் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஊழியர் ஒருவர் பைலை எடுக்க ஒரு அறையை திறந்துள்ளார். அங்கு ரெடியாக அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த அறையில் கீறியும் - நாகப்பாம்பும் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
 
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து கேட்ட சக ஊழியர்களும் அலுவலகத்திலிருந்து தெறித்து ஓடினர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், பாம்பையும் கீறியையும் பிடித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.