1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (18:32 IST)

பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா: தருண் விஜய் மீது விசிக பாய்ச்சல்!

பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா: தருண் விஜய் மீது விசிக பாய்ச்சல்!

பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களின் நிறம் குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் தருண் விஜயை கடுமையாக சாடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ஆப்பிரிக்க நாட்டவர் மீது டில்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், "நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?" என்று கேட்டுள்ளார்.
 
உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர்.
 
கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, 'பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?' என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், 'தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும் தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?' என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.