வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (16:42 IST)

தமிழ்நாடு குறிவைக்கப்பட்டுள்ளது: திருமாவளவன் ஆவேச பேச்சு..!

தமிழ்நாடு சனாதன சக்திகளால் குறிவைக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ’இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செங்கோல் இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள செங்கோலை தான் எடுக்க வேண்டுமா? தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதீனங்கள் தான் அதை எடுத்து தர வேண்டுமா? ஏன் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?
 
 தமிழ்நாடு குடி வைக்கப்பட்டுள்ள. ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்கள் சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் மிக இறுக்கமாக இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு கேரளா மிக இறுக்கமான மாநிலங்களாக இருக்கின்றன
 
ஆகவே அவர்கள் குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள், இதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது, தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தேசத்தை நாம் பாதுகாப்பாக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
 
Edited by Mahendran