லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஒ... எருமை மாட்டுக்கு மனு ...கரூர் அருகே பரபரப்பு...

karur
c anandakumar| Last Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:16 IST)
கரூர் அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் சான்றிதழ்  வழங்க  லஞ்சம்  கேட்கும்  கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் .
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் பழைய ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ராஜ் அவர்களை பணி நீக்கம் செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டும், கட்ட பஞ்சாயத்து செய்யும் பழைய ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர்ராஜ் அவர்களை பணிநீக்கம் செய் எனவும், உரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு தாமதம் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


இதில் மேலும் படிக்கவும் :