செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (16:29 IST)

தமிழக அரசு வழங்கும் ரூ.2000 ஒருவித லஞ்சம் - சீமான் அதிரடி

தமிழக  அரசு தற்போது மக்களுக்கு ரூ..2000 பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒரு விதமான லஞ்சம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் தமிழக வீரர்கள். இதை மன்னிக்கவே முடியாது. தீவிரவாதிகளின் வாகனம் வரும் வரை சோதனைச் சாவடிகளே இல்லையா...சரியான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா இல்லையா என்பது சந்தேகம் உண்டாக்குகிறது.நம் நாட்டில் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை நாட்டில் உள்ள மக்களையும் பயமுறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும் தமிழக் அரசு மக்களுக்கு ரூ. 2000 வழங்குவதாக அறிவித்துள்ளதும் ஒரு வகையான லஞ்சமே. மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ. 6000 தருவதாக பட்ஜெட் தாக்கலின் பொது தெரிவித்தது. நம் நாட்டில் விவசாயிகளுக்கு ரூ. 6000 ரூபாய்தான் கொடுக்கும் நிலை உள்ளது. நம் எவ்வளவு பின்தங்கிய தேசமாக இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்.வரும் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்க்காக  நான் கட்சி தொடங்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.