வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (10:59 IST)

176 நாட்களுக்கு பின் சிக்கிய விஏஓ: 2வது மனைவியின் மரணத்திற்கு காரணமானவரா?

அரியலூர் மாவட்டம் முத்துசேர்வமடத்தில் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி படித்து வந்த புஷ்பா என்பவரையும் காதலித்து வந்தார்.

இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமலும், திருமணம் ஆனதை மறைத்தும் புஷ்பாவை திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன.

இந்த நிலையில் முதல் மனைவி குறித்து புஷ்பாவுக்கு தெரிய வர இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புஷ்பா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் அருகில் உள்ள முந்திரி தோப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புஷ்பாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான விஏஓ செல்வராஜை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 176 நாட்களுக்கு பின்னர் இன்று சென்னை குன்றத்தூரில் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். செல்வராஜை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.