வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (08:05 IST)

ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கையில்லை: வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டால் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள ஒரு சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி தாராளமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் 53 வயது நபர் ஒருவர் தவித்துக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்றும்படி அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், திரு.முருகன்(53) 9444201327 அனுமதிக்கப்பட்டு Pulse  குறைந்து  கொண்டிருப்பமாகவும், படுக்கை வசதி இல்லாமல் தவிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் நிறைய நோயாளிகள் அங்கிருப்பதாக கூறுகின்றனர். தயவுசெய்து @Vijayabaskarofl கவனிக்கவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்
 
வானதி சீனிவாசன் அவர்களின் இந்த டுவிட்டை அடுத்து ஒரு சில மணி நேரத்தில் அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் பதிலளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ள நோயாளி தற்போது ஏழாவது மாடியில் உள்ள அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஸ்கேன் செய்ய இருப்பதாகவும், அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். டாக்டரின் டுவிட்டை அடுத்து அவருக்கு வானதி ஸ்ரீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.